ராகவா லாரன்ஸ் படத்திலிருந்து அஞ்சலி நீக்கம்- நித்யா மேனனுக்கு சான்ஸ்!

|

ராகவா லாரன்ஸின் முனி 3 படத்திலிருந்து அஞ்சலி நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சனா' படத்தை எடுத்து வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸ் அடுத்து, ‘முனி பாகம்-3' படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக டாப்சி நடிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் படத்திலிருந்து அஞ்சலி நீக்கம்- நித்யா மேனனுக்கு சான்ஸ்!

(நித்யா மேனன் படங்கள்)

படத்தின் ‘பிளாஷ்பேக்'கில் வரும் நாயகியாக முதலில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் அஞ்சலியுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. அவர் இருப்பது ஹைதராபாதிலா அமெரிக்காவிலா என்றே தெரியவில்லை.

அஞ்சலி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வேறு பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதனால், ‘முனி பாகம்-3' படத்தில் அஞ்சலியை நடிக்க வைக்கும் திட்டத்தை ராகவா லாரன்ஸ் கைவிட்டு விட்டார். அவருக்கு பதில், நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உருப்படியாக ஒரு வெற்றிப் படத்திலும் நடிக்காவிட்டாலும், நித்யாமேனனுக்கு தமிழ் சினிமாவில் புதிதாக மவுசு கிடைத்துள்ளது. பெரிய சம்பளம் வேறு!

 

Post a Comment