வீரம் ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்த தமன்னா திட்டம்

|

சென்னை: வீரம் படம் ஹிட்டானால் தனது சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில் உள்ளாராம் தமன்னா.

கோலிவுட்டில் டாப் கியரில் சென்ற தமன்னாவின் மார்க்கெட் திடீர் என்று சரிந்தது. ஒரு கட்டத்தில் தமன்னா கோலிவுட்டில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வீரம் ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்த தமன்னா திட்டம்

வீரம் படத்தை நடித்து முடித்துள்ள அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துள்ளன. மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது கோடிகளில் சம்பளம் வாங்கியவர் தமன்னா. அதன் பிறகு அவரது சம்பளம் குறைந்துவிட்டது.

இந்நிலையில் வீரம் படம் ஹிட்டானால் கோலிவுட்டில் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம் தமன்னா. வீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அவர் திடமாக நம்புகிறார்.

 

+ comments + 1 comments

Anonymous
23 December 2013 at 08:44

OVERA PUBLICTY
THTHA THAL DOUBTFUL STARTER

Post a Comment