சென்னை: சிம்பு - கவுதம் மேனன் இணையும் புதிய படத்துக்கு சட்டென்று மாறுது வானிலை என்று பெயர் சூட்டியுள்ளனர்.
நீதானே என் பொன் வசந்தத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். மும்பை மாடல் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக வேகமாக நடந்து வருகிறது. பெயரில்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இப் படத்துக்கு 'சட்டென்று மாறுது வானிலை' என பெயர் வைத்துள்ளனர்.
இது அவரது முந்தைய படமான 'வாரணம் ஆயிரம்' படத்தில் பிரபலமான 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' என்ற பாடலில் வரும் வரியாகும். தொடர்ந்து நல்ல தமிழில் தன் படங்களுக்கு தலைப்பு வைத்து வருகிறார் கவுதம் மேனன். (ஆனால், படத்தில்தான் தமிழ் வசனங்களைக் காலி செய்துவிட்டு, ஆங்கிலத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார்!)
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகின்றனர்.
இந்தப் படத்திற்கான முதல் டியூனே தாளம் போடவைப்பதாக இருந்தது. பாடல்களைக் கேட்க மகா ஆர்வமாக உள்ளேன் என ரஹ்மான் இசை குறித்து சிம்பு தெரிவித்துள்ளார்.
Post a Comment