சென்னை: சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் சென்னை அணி தூதராக
இந்த அணிக்கு விளம்பர தூதுவராக பணியாற்ற நடிகை தேர்வு நடந்தது. தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் திரிஷா தேர்வாகியுள்ளார். இதற்காக அவருக்கு கணிசமான தொகை சம்பளமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அணிக்கு விளம்பர தூதுவராக தேர்வானது குறித்து திரிஷா கூறுகையில், "சென்னை ரைனோஸ் அணிக்கு தூதுவராகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக இந்த பொறுப்புக்கு நான் பரிசீலிக்கப்பட்டேன். பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. முதல் தடவையாக எனக்கு பிடித்த சென்னை அணிக்கு விளம்பர தூதுராகி உள்ளேன். நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்றார்.
சமீபத்தில்தான் சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு நான் தூதராக இல்லை. ஏனோ என்னை தேர்வு செய்யவில்லை என்று ஏக்கத்துடன் அறிக்கை விட்டிருந்தார் த்ரிஷா. இப்போது அவர் ஏக்கம் நிறைவேறிவிட்டது.
Post a Comment