ரஜினி பிறந்தநாளை உலக ஸ்டைல் தினமாக அறிவியுங்கள்: இப்படி ஒரு போஸ்டர்

|

நெல்லை: ரஜினிகாந்தின் பிறந்தநாளை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்கக் கோரி உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்து ரஜினி ரசிகர்கள் நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

தமிழ் திரை உலகில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜினிகாந்த். ரஜினி என்றாலே அவர் சிகரெட்டை தூக்கிப் போடும் ஸ்டைலும், முடியை கோதும் ஸ்டைலும், கண்ணாடியை மாட்டும் ஸ்டைலும் தான் மக்களுக்ககு நினைவு வரும்.

ரஜினி பிறந்தநாளை உலக ஸ்டைல் தினமாக அறிவியுங்கள்: இப்படி ஒரு போஸ்டர்

வரும் 12ம் தேதி அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் அன்னதான குழு நெல்லையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.

அதில், எங்கள் உயிர் அகில உலக ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் பிறந்த டிசம்பர் 12ம் தேதியை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நெல்லை ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் பானுசேகர் கூறுகையில்,

6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது நாடு கடந்த ரசிகர்களின் விருப்பம் ஆகும். இதனையே நெல்லை ரசிகர் மன்றமும் வலியுறுத்துகிறது என்றார்.

 

Post a Comment