கோவையில் ஆரம்பத்தை விட அதிக தியேட்டர்களில் ஜில்லா?

|

சென்னை: கோவை நகரில் மட்டும் ஜில்லா படத்தை சுமார் 60 ஸ்கிரீன்களில் திரையிட அப்பகுதிக்கான வினியோக உரிமையை வாங்கிய காஸ்மோ பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதாம்.

விஜய்யின் ஜில்லா பொங்கலுக்கு ரிலீஸாகிறது. படத்தின் வினியோக உரிமை இரண்டே நாட்களில் விற்றுத் தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கோவை நகருக்கான வினியோக உரிமையை காஸ்மோ பிலிம்ஸ் வாங்கியது என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

கோவையில் ஆரம்பத்தை விட அதிக தியேட்டர்களில் ஜில்லா?

இந்நிலையில் காஸ்மோ பிலிம்ஸ் ஜில்லா படத்தை கோவையில் சுமார் 60 ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம். இதே காஸ்மோ பிலிம்ஸ் தான் ஆரம்பம் படத்தையும் கோவையில் வெளியிட்டது.

நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் ஆரம்பம் படத்தை விட அதிக ஸ்கிரீன்களில் கோவையில் ரிலீஸாகவிருக்கிறது.

 

Post a Comment