கவுதம் மேனன்- சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வைத்த வேகத்தில் மாறிவிட்டது.
இந்தப் படத்துக்கு இரு தினங்களுக்கு முன்புதான் சட்டென்று மாறுது வானிலை என்று பெயர் வைத்தார்கள். அதை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்த செய்திகள் அடுத்தடுத்து மீடியாவில் வரத் தொடங்கியதுமே, ஏற்கெனவே இதே பெயரில் ஒரு படம் முடிந்து ரிலீசுக்கும் தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.
அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கவுதம் மேனனைத் தொடர்பு கொண்டு, உங்க படத்தின் பாடல் வரியைத்தான் 'சட்டென்று மாறுது வானிலை' என்று வைத்தோம். படம் முடிந்து 2012-லேயே சென்சார் சான்று கூட வாங்கிட்டோம் சார், என்றார்களாம்.
வேறு வழியின்றி சரி சொன்ன கவுதம் மேனன், இப்போது தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளார்.
விரைவில் புதிய தலைப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment