சென்னை: சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்தப் படம் முழுக்க முழுக்க வெங்கட் பிரபு பாணியில் ஆக்ஷன் - ரொமான்ஸ் - காமெடி கலந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்காத்தா முடிந்ததும், சூர்யாவை வைத்து படம் இயக்கத்தான் வாய்ப்பு கேட்டிருந்தார் வெங்கட் பிரபு.
ஆனால் சூர்யா அப்போது மாற்றான், சிங்கம் 2 என படு பிஸியாக இருந்ததால், அந்த இடைவெளியில் கார்த்தியை வைத்து 'பிரியாணி'யை தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள் ஸ்டுடியோ கிரீன்காரர்கள்.
இப்போது சூர்யா லிங்குசாமி படத்தில் நடிக்கிறார். இடையில் அவர் நடிக்கவிருந்த கவுதம் மேனன் படம் ட்ராப்பாகிவிட, இப்போது அந்த கால்ஷீட்டை வெங்கட்பிரபுவுக்கு கொடுத்திருக்கிறார் சூர்யா.
வெங்கட் பிரபு சொன்ன ஒரு வரிக் கதையில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்ட சூர்யா, இந்தப் படத்தை நாம் கண்டிப்பாக செய்வோம். ஏப்ரலில் ஆரம்பித்துவிடலாம் என கூறியுள்ளாராம்.
முக்கியமான விஷயம், இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது நடிகர் சூர்யா ஆரம்பித்துள்ள புதிய பட நிறுவனமான டி 2 எண்டர்டெயின்மென்ட்!
Post a Comment