புறம்போக்கு பட நாயகியாக கார்த்திகா - மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்திய ராதா!

|

இயற்கை', ‘பேராண்மை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் ‘புறம்போக்கு' என்ற தலைப்பில் புதிய படம் இயக்குகிறார்.

இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனும் தயாரிக்கிறார்.

இரண்டு ஹீரோக்கள் உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ‘கோ' படத்தில் நடித்த நடிகை கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோக்கள் இரண்டானாலும் படத்தின் ஹீரோயின் ஒருவர்தானாம். இதனால் கார்த்திகா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம்.

புறம்போக்கு பட நாயகியாக கார்த்திகா - மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்திய ராதா!

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் குல்லுமணாலியில் தொடங்குகிறது. கார்த்திகா தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து ‘டீல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படங்களே இல்லாமல் இருந்தார்.

எனவே திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் கார்த்திகாவின் அம்மா நடிகை ராதா. இப்போது பெரிய பட வாய்ப்பு வந்திருப்பதால் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளாராம்.

 

Post a Comment