சூர்யா - கவுதம் மேனன் விவகாரம் கிட்டத்தட்ட அனைவர் மனதிலிருந்தும் மறந்தே போயிருந்த தருணத்தில்... மீண்டும் அதற்கு தன் தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன்.
இதுகுறித்து இந்த வார ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "முதல்ல நான் ஒரு கதை சொன்னேன். 'வேற ஸ்கிரிப்ட் போலாமே'னு சொன்னார் சூர்யா.
'என்னை நோக்கிப் பாயும் தோட்டா'னு இன்னொரு ஸ்கிரிப்ட் சொன்னேன். அதுவும் வேண்டாம்னு சொல்லிட்டார்.
'அப்ப 'துருவ நட்சத்திரம்'தான் அடுத்து நான் பண்ற படமா எனக்குத் தெரியுது சூர்யா'னு சொன்னேன். 'ஓ.கே.'னு அவர் சம்மதிச்ச பிறகே வேலைகளை ஆரம்பிச்சோம்.
ரஹ்மான் சார் மியூசிக், த்ரிஷா ஹீரோயின், பார்த்திபன், அருண் விஜய்னு எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி படப்பிடிப்புத் தேதியும் முடிவு பண்ணோம்.
ஆனா, படப்பிடிப்பு அன்னைக்கு காலையில், 'எனக்கு இது வேண்டாம்'னு சொல்லிட்டார்.
அதுவும் போக கடந்த ஒரு வருஷமா, 'ஏன் இது, ஏன் அது'னு நிறையக் கேள்விகள். முதல்ல அவரோட அறிக்கை என்னை ரொம்ப அப்செட் ஆக்கினது. ஆனா, ஒருவிதத்தில் கொஞ்சம் ரிலீஃபாகவும் இருந்தது. 'அப்பாடா'னு நிம்மதி கொடுத்துச்சு அந்த அறிக்கை.
'என்ன பிரச்னை... ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாச்சே?'னு ஏகப்பட்ட விசாரிப்புகள். ஆனா, 'என்ன நடந்துச்சு'னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும்னு அமைதியாகிட்டேன். என்ன ஒண்ணு, 'துருவ நட்சத்திரம்'க்காக வாங்கிவெச்சிருந்த ரஹ்மான் சார் டேட்ஸ் அத்தனையும் வீணாப்போச்சு. ஆனா, இப்போ அவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும், சிம்பு நடிக்கும் படத்துக்கு நான் கதை சொன்னதும் ட்யூன் அனுப்பிட்டார். இங்கே ரொம்ப நல்லவங்களும் இருக்காங்கனு நினைச்சுக்கிட்டேன்!''
''அந்த அறிக்கை சம்பந்தமா சூர்யாகிட்ட நீங்க எதுவும் பேசலையா?''
''நேர்லயே போய் சந்திச்சேன். 'எதுவா இருந்தாலும் நாம ரெண்டு பேர் மட்டுமே பேசி முடிவெடுத்திருக்கலாமே... அறிக்கையெல்லாம் எதுக்கு?'னு கேட்டுட்டு கை குலுக்கிட்டு வந்துட் டேன். அப்புறம் அவர் வீட்ல நடந்த ஒரு விசேஷத்துக்கு என்னை இன்வைட் பண்ணியிருந்தார். ஆனா, ஷூட்டிங் பரபரப்பில் என்னால் கலந்துக்க முடியலை. என்ன நடந்தாலும்... இப்பவும் எப்பவும் சூர்யா என் நண்பன்தான்!''
-இவ்வாறு கூறியுள்ளார் கவுதம் மேனன்.
Post a Comment