சென்னை: மம்மூட்டி நடிக்கும் மலையாள படத்தில் இளையதளபதி விஜய் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார்.
மம்மூட்டியை வைத்து மலையாள இயக்குனர் ஆஷிக் அபு எடுக்கவிருக்கும் படம் தி கேங்ஸ்டர். இதில் மம்மூட்டி பெரிய தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ம் தேதி துவங்குகிறது. படத்தில் ஆஷிக் அபுவின் காதல் மனைவி ரீமா கல்லிங்கல், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ஒரு பாடலுக்கு இளையதளபதி விஜய்யை ஆட வைக்கிறார்கள். இது குறித்து விஜய்யிடம் கேட்டதற்கு அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக விஜய் பிரபுதேவாவின் சிறுத்தை இந்தி ரீமேக்கான ரவுடி ராத்தோர் படத்தில் ஒரு பாடலில் சில ஸ்டெப்ஸ்கள் போட்டிருப்பார். அந்த ஸ்டெப்ஸ்களை பார்த்தே படத்தின் ஹீரோ அக்ஷய் குமார் அசந்துவிட்டார். விஜய் ஒரு சிறந்த டான்ஸர் என்பது அனைவரும் அறிந்ததே.
Post a Comment