நான் 'தல'ன்னு தான் சொன்னேன், 'தலைவர்'னு சொல்லவே இல்ல: டாப்ஸி பதறல்

|

சென்னை: நான் தல என்று தான் கூறினேன் தலைவர் என்று கூறவே இல்லை என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

நடிகை டாப்ஸி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆரம்பம் படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் தனது கதாபாத்திரம் பற்றியும் பேசினார்.

மேலும் தனக்கு அஜீத் குமாரின் குணம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். நான் தலைவரை(ரஜினிகாந்த்) விட தல ரசிகையாக்கும் என்று தெரிவித்திருந்தார்.

நான் 'தல'ன்னு தான் சொன்னேன், 'தலைவர்'னு சொல்லவே இல்ல: டாப்ஸி பதறல்

இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் கொதித்துவிட்டனர். இது குறித்து அறிந்த டாப்ஸி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் பேட்டியின்போது கூறியதை தவறாக எழுதிவிட்டனர். நான் தலயைக் காட்டிலும் அஜீத் ரசிகை என்று தான் கூறினேன். அவரை ரஜினி சாருடன் ஒப்பிடவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment