சென்னை: வீரம் படத்தை குறித்த நேரத்திற்குள் முடித்ததற்காக இயக்குனர் சிவாவை தயாரிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர்.
சிறுத்தை சிவா அஜீத் குமார், தமன்னா, விதார்த், சந்தானம், அப்புக்குட்டி உள்ளிட்டோரை வைத்து இயக்கியுள்ள படம் வீரம். படத்தை விஜய வாஹினி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு துள்ளல் இசைக்கு பெயர்போன தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வீரம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து பிற வேலைகள் நடந்து வருகிறது. படத்தை இழுத்தடித்து பட்ஜெட்டை எகிற வைக்காமல் குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டில் சிவா முடித்துவிட்டார்.
திறமையாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள சிவா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தயாரிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து தயாரிப்பாளர்களான பாரதி ரெட்டி மற்றும் வெங்கட்ராம ரெட்டி கூறுகையில்,
அஜீத்தின் தொழில் பக்தி மற்றும் நேர்மையை பார்த்து மற்றவர்களும் அதை பின்பற்றுவதே இந்த திட்டமிட்ட பயணத்திற்கு காரணம். படம் பொங்கலுக்கு நிச்சயம் ரிலீஸாகும் என்றனர்.
Post a Comment