கரகாட்டக்காரன் தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி மரணம்!

|

சென்னை: கரகாட்டக்காரன் படத்தைத் தயாரித்த கருமாரி கந்தசாமி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

1989-ம் வருடம் ராமராஜன் நடிப்பில் வெளிவந்து மூன்று வருடங்கள் ஓடி சாதனை படைத்த படம் ‘கரகாட்டக்காரன்'. ராமராஜன் - கனகா நடித்து, இளையராஜா இசையமைக்க, கங்கை அமரன் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘வில்லுப்பாட்டுக்காரன்', ‘எல்லாம் அவன் செயல்' ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பு மட்டுமின்றி ‘வளர்த்தகடா', ‘கோயில் யானை' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். பிலிம் சேம்பரில் பொருளாராகவும் பணியாற்றியுள்ளார். 100-க்கும் அதிகமான படங்களின் விநியோகஸ்தராக இருந்துள்ளார்.

இவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் துரை அரசன் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் அடக்கம் செய்யப்படுகிறது. அதற்காக இன்று திருச்சிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது.

இறந்த கருமாரி கந்தசாமியின் குடும்பத்தினருக்கு சினிமாத்துறையை சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

Post a Comment