மும்பை: பாலிவுட்டின் பிரபல நாயகி ராணி முகர்ஜியும் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவும் வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஜோத்பூரில் உள்ள பிரமாண்ட உமைத் பவன் மாளிகையில் இந்த திருமணம் நடக்கிறது.
(ராணி முகர்ஜி படங்கள்)
இந்தி நடிகை ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணமாகாமலேயே சேர்ந்து வாழ்வதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்பட்டது. தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 10-ந் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். முகூர்த்தம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் மாளிகையில் நடக்கிறது. இரண்டு வாரங்கள் திருமண சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த திருமணத்துக்கு உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில நடிகர் - நடிகைகளை மட்டுமே அழைக்கப் போகிறார்களாம்.
Post a Comment