நடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைப்பு - நேரில் வருவாரா?

|

சென்னை: நடிகை அஞ்சலி மீது இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னணி தமிழ் மற்றும் தெலுங்கு கதாநாயகி வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. இவர், தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக மீடியாக்களிடம் புகார் கூறி இருந்தார்.

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி களஞ்சியம் தரப்பில் சைதாப்பேட்டை பெருநகர 17- வது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைப்பு - நேரில் வருவாரா?

இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்குமாறு அஞ்சலி கேட்டுக் கொண்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

எனவே அவர் சென்னைக்கே வராமல் ஹைதராபாதிலேயே தங்கியுள்ளார்.

நேற்று இந்த வழக்கு மீதான விசாரணை 17-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உமாராணி முன்பு வந்தது. அப்போது இந்த வழக்கை வருகிற பிப்ரவரி 10-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

பத்தாம் தேதியும் அஞ்சலி நேரில் ஆஜராவாரா என்பது சந்தேகமே.

 

Post a Comment