கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

|

கல்வி வளர்ச்சிதான் ஒரு நாட்டை வல்லரசாக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி தனது ஜெய்ஹிந்த் 2 படத்தை எடுக்கிறார் அர்ஜூன்.

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2. கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .

கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாலே, அதுல் மாதூர், மயில்சாமி, மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமித் திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

எச் சி வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். அர்ஜூன் ஜெனியா இசை அமைக்கிறார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.

கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

அர்ஜூன் மகள்கள் ஐஸ்வர்யா, அஞ்சனா இணைந்து தயாரிக்கின்றனர். கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் - அர்ஜுன்.

படம் பற்றி அர்ஜுன் என்ன சொல்கிறார் என்று கேட்டோம்...

"தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இதை உருவாக்குகிறேன். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்தது விட்டது.

கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

சமீபத்தில் பாங்காக்கில் ஒரு சண்டை காட்சியை படமாக்கினோம். ராணுவம் சம்மந்தப்பட்ட இடம் அது. சுமார்பத்து ஏக்கர் அந்த இடம் முழுக்க உபயோகம் இல்லாத பிளைட்கள், படகுகள், கார்கள், என குவிந்து கிடந்தது. அங்கே அமெரிக்க ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதும் காட்சிகள் பத்து நாட்கள் படமானது.

இது என் இயக்கத்தில் ஒரு லட்சியப் படம் என்றே சொல்லலாம். ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வியை பொறுத்தே அமைகிறது என்கிற கருத்தை வலியுறுத்தும் படமாக ஜெய்ஹிந்த் -2 இருக்கும். அடுத்து மும்பையில் 20 நாட்களும் லண்டனில் 20 நாட்களும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி அர்ஜூன் இயக்கும் ஜெய்ஹிந்த் 2!

சென்னையில் 20 நாட்கள் படப்பிடிப்புடன் படம் முடிந்து விடும்," என்கிறார் அர்ஜுன்.

 

Post a Comment