தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சந்தானம் மலையாளப் படத்தில் அறிமுகமாகிறார்.
நகைச்சுவையில் இணையற்றவரான கவுண்டமணி பாணியைப் பின்பற்றி தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்தவர் சந்தானம்.
தனது ஒன்லைனர்கள் மற்றும் நக்கல் வசனங்களால் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.
தமிழ் சினிமாவில் நடிக்கவே நேரம் போதாமல் திணறும் சந்தானத்துக்கு, மலையாளப் படவுலகிலிருந்தும் வாய்ப்புகள் வந்துள்ளன.
'சலாலா மொபைல்ஸ்' என்ற படத்தின் மூலம் மலையாள திரைப்பட உலகிலும் அறிமுகமாக உள்ளார். மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பராக அழகர்சாமி என்ற தமிழராகவே இந்தப் படத்தில் அறிமுகமாகும் இவர், கதையின் முக்கிய திருப்புமுனையாக வருகிறாராம்.
ஒரு மொபைல் கடையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் மம்முட்டி மகன் துல்கர் சல்மானும், நஸ்ரியா நசீமும் முதல் நிலை கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
இந்தப் படத்தில் மர்மமான குணாதிசயம் கொண்ட அழகர்சாமி என்ற தமிழ் இளைஞனாக நடிகர் சந்தானம் தோன்றுகின்றார். இந்தப்படத்தின் திரைக்கதையை உருவாக்கும்போதே நடிகர் சந்தானம்தான் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று எனக்குள் தோன்றி இப்படத்தின் இயக்குநர் சரத் ஏ ஹரிதாசன் தெரிவித்துள்ளார்.
சந்தானத்துக்காக பல நாட்கள் காத்திருந்து, அவரது காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். தனது கேரக்டருக்கு தானே டப் செய்துள்ளாராம் சந்தானம்.
Post a Comment