சென்னை: விஜய் இயக்கும் சைவம் படத்தில் அறிமுகமாகிறார் நாசர் - கமீலா தம்பதியின் மகன் பாஷா என்கிற குட்டு.
தலைவா படத்துக்குப் பிறகு சைவம் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் ஏஎல் விஜய்.
படத்தின் தலைப்புக்கு மெனகெட்டதைப் போலவே, தனது படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்டவும் மெனக்கெட்டார்.
பல்வேறு பெயர்களைப் பரிசீலித்த பிறகு, நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ' பாஷா' என பெயர் சூட்டியுள்ளார்.
குட்டு (Guddu) என்று செல்லமாக அழைக்கப்படும் 'பாஷா' அறிமுக படத்திலேயே இயக்குநரை பாராட்டு பத்திரம் வாசிக்க வைக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், "என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு பாத்திரம் இருக்கும். நான் அவருடைய தீவிர ரசிகர் என்பாதால் மட்டுமல்ல, அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுப்பவர்.
என்னுடைய சைவம் படத்திலும் அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம். அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க நடிகர் தேர்வு செய்யும் போது எதேச்சையாக அவரது மகன் லுப்துபுதீனை சந்திக்கும் போது அச்சு அசலாக அந்த பாத்திரத்துக்கு பொருத்தமாகத் தெரிந்தார். நடிக்க மறுத்த அவரை பெற்றோரின் சம்மந்ததொடு நடிக்க வைத்தேன்.
அவரை காமிராவில் பார்த்த போது 'நாயகன்' நாசரை நினைவுப்படுத்தினார். அவரது தோற்ற பொலிவு ஒரு புறம் இருக்க அவரது திறமையும், கண்ணியமும், என்னை மிகவும் கவர்ந்துவிட்டது," என்றார்.
Post a Comment