அந்த நடிகர் வேண்டாம் வேற யாரையாவது நடிக்க வைங்க: இயக்குனர் பரிந்துரை

|

சென்னை: தன்னை வெட்ட வெட்ட வளர்வேன் என்று இரண்டு எழுத்து நடிகர் தெரிவித்து வருகிறாராம்.

இசை குடும்பத்தில் இருந்து வந்துள்ள அந்த இரண்டு எழுத்து நடிகர் கன் இயக்குனர் தயாரித்த படத்தில் நடித்தபோது அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று நினைத்தாராம். இதனால் படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

இதையடுத்து தான் கலந்து கொள்ளும் சினிமா விழாக்களில் கன் இயக்குனர் இரண்டு எழுத்து நடிகரை சாடை மாடையாக தாக்கிப் பேசி வருகிறார். மேலும் அந்த நடிகரை வைத்து யாராவது படம் எடுப்பதாக கேள்விப்பட்டால் உடனே அவர்களை அணுகி அவர் வேண்டாம் வேறு யாராவது நல்ல நடிகரை நடிக்க வையுங்கள் என்கிறாராம்.

இதனால் இசை குடும்ப வாரிசுக்கு சில பட வாய்ப்புகள் கை நழுவியுள்ளதாம். மேடைதோறும் அந்த இயக்குனர் தன்னை தான் வசை பாடுகிறார் என்பதை தெரிந்து கொண்ட நடிகர் திரையுலகில் யாருடைய வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது என்கிறாராம். மேலும் தன்னை வெட்ட வெட்ட வளர்வேன் என்று கூறுகிறாராம்.

 

Post a Comment