படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்!

|

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இந்திப் படத்தின் படப்பிடிப்பின்போது காயமடைந்தார்.

மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஹேப்பி நியூ இயர் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இன்று படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட சிறிய விபத்தில் ஷாருக் கான் காயமடைந்தார்.

படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்!

காயமடைந்து துடித்த அவரை உடனடியாக நானாவதி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஷாருக் கானுக்கு ஏற்பட்டுள்ளது பெரிய காயமா அல்லது சாதாரணமான காயமா என்பது தெரியவில்லை.

ஐந்து நட்சத்தர ஹோட்டலில்தான் இந்தப் படப்பிடிப்பு நடந்தது. அப்போது திடீரென ஒரு கதவு அவர் மீது பலமாக மோதியதில் அவர் காயமடைந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

 

Post a Comment