மகேஷ் பாபுவை வைடுத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுக்கும் மணிரத்னம்

|

மகேஷ் பாபுவை வைடுத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுக்கும் மணிரத்னம்

சென்னை: மணிரத்னம் மகேஷ் பாபுவை வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறாராம்.

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் கடந்த 10ம் தேதி ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மகேஷ் தற்போது ஸ்ரீனு வைட்லாவின் ஆகடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்குவது தொடர்பாக மணிரத்னம் அவருடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

ஆனால் நே ஒக்கடினே படத்தில் பிசியாக இருந்ததால் மகேஷ் மணிரத்னத்திடம் பிடி கொடுக்காமல் பேசி வந்தார். இந்நிலையில் நே ஒக்கடினே ரிலீஸாகியுள்ளதால் ஆகடுவை முடித்துவிட்டு மணிரத்னத்தின் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் மகேஷ் பாபு.

சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுக்கப்படும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகுமாம். திரைக்கதை அமைக்கும் பணி வரும் மார்ச் மாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்தும் நன்றாகப் போனால் இந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

மணிரத்னம் மலையாள நடிகரான பஹத் பாசிலை வைத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு படத்தை எடுக்க உள்ளார். ஆனால் மகேஷ் பாபு சம்மதம் தெரிவித்துவிட்டதால் முதலில் அவரை வைத்து படம் எடுக்கவிருக்கிறாராம் மணி.

மணிரத்னத்தின் முந்தைய படமான கடல் பப்படமானதால் அவர் மகேஷ் பாபுவின் படத்தை மிகுந்த கவனத்துடன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment