'வீரம் படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையாமே!'

|

வீரம் படத்தில் கதாநாயகியான தமன்னாவுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார் இயக்குநர் சிவா.

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அஜீத்குமாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் சிவா கூறுகையில், "அஜீத்துடன் பணியாற்றியது ஒரு சந்தோஷமான அனுபவம். அஜீத் துணிச்சல் மிகுந்தவர் என்பது நிறைய பேருக்கு தெரியும்.

'வீரம் படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையாமே!'

இந்தப் படத்தில் இடம்பெறும் பயங்கரமான ஒரு ரயில் சண்டை காட்சியில், 'டூப்' நடிகரைப் பயன்படுத்தலாம் என்று நானும், ஸ்டண்ட் மாஸ்டரும் சொன்னோம். அஜீத் ஏற்கவில்லை. அவருக்கு நடப்பது எனக்கு நடக்கட்டும், என்று துணிச்சலுடன் அந்த காட்சியில் நடித்தார்.

தமன்னா

தமன்னாவுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறுவதில் உண்மையில்லை.

'வீரம் படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையாமே!'

இதுவரை தமன்னா நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு, 'வீரம்' படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தமன்னாவே

என்னிடம் தெரிவித்தார். ''இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

 

Post a Comment