ஷங்கர் பட வாய்ப்பை இப்படித்தான் இழந்தேங்க! - ஜீவா

|

ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை சிறு தயக்கத்தால் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக ஏற்கெனவே நடித்தவர் ஜீவா.

அவர் அடுத்து விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்க ஆரம்பித்தபோது ஜீவாவையும் அழைத்திருக்கிறார். ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க சற்று தயங்கியுள்ளார் ஜீவா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நண்பன்' படம் முடிவந்தவுடன் சங்கர் சார் ‘ஐ' படம் எடுப்பதில் பிசியாக இருந்தார். அவர் ஏற்கனவே ஹீரோ கதாபாத்திரத்திரத்திற்கு விக்ரம் என்பதை தீர்மானித்துவிட்டார். பின்னர் விக்ரமுக்கு இணையான வில்லன் கதாபாத்திரத்திற்காக என்னை தொடர்பு கொண்டார்.

ஷங்கர் பட வாய்ப்பை இப்படித்தான் இழந்தேங்க! - ஜீவா

இது வழக்கமான வில்லன் வேடம் அல்ல. எனவே அந்த கதாபாத்திரத்தில் நீ நடிக்க வேண்டும் என்று கேட்டார். எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால் உடனே பதில் சொல்லவில்லை.

‘சிங்கம் புலி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தபோதும் இமேஜ் நினைத்து நான் கொஞ்சம் பயந்தேன். படம் வெளியானபோது எனது நடிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த ரெஸ்பான்ஸ்தான் கிடைத்தது. அதுதான் இப்போது தயங்கினேன்.

ஷங்கர் சார் எனக்கு கொடுத்த வாய்ப்பை நிராகரித்த பின் அந்த வில்லன் வாய்ப்பு பாலிவுட் நடிகர் உபேன் படேல்-க்கு சென்றது," என்றார்.

 

Post a Comment