வீரம் படம் ரஜினியின் முரட்டுக்காளை ரீமேக்கா?- இயக்குநர் விளக்கம்

|

சென்னை: அஜீத் நடித்துள்ள வீரம் படம் ரஜினியின் முரட்டுக்காளை படத்தின் தழுவல் அல்ல என்று படத்தின் இயக்குநர் சிவா தெரிவித்தார்.

அஜீத், தமன்னா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம். விஜயா நிறுவனம் நடித்துள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்தப் படம் கிராமத்து பின்னணியில், அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள், ட்ரைலர் பார்த்த பிறகு, இது ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற பேச்சு கிளம்பிவிட்டது.

வீரம் படம் ரஜினியின் முரட்டுக்காளை ரீமேக்கா?- இயக்குநர் விளக்கம்

(வீரம் படங்கள்)

நேற்று நடந்த வீரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து இயக்குநர் சிவாவிடம் கேட்டபோது, "இந்தப் படம் அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டது. ஆனால் முரட்டுக்காளையின் ரீமேக் அல்ல.

அண்ணன் - தம்பிகளின் கதை என்பதால், அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த படத்தின் சாயலும் இதில் இருக்காது.

மலையாளப் படமான வெள்ளியேட்டன் படத்தின் தழுவல் என்று கூறப்படுவதும் தவறான தகவல். 'வீரம்,' நேரடி தமிழ் படம்," என்றார்.

 

+ comments + 2 comments

Anonymous
4 January 2014 at 13:07

veeram will be flop

4 January 2014 at 18:00

copy adikkarathu VIJAY MAMA vela da THALA Is best . sutha mudunga da ...

Post a Comment