குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா உதய் கிரண்?

|

குடும்பப் பிரச்சினை காரணமாகவே நடிகர் உதய் கிரண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்ரம் தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் உதய் கிரண். தொடர்ந்து நுவ்வு நேனு என்ற பெரிய வெற்றிப் படத்தில் நடித்தார். விருதுகளையும் வென்றார். ரொமான்டிக் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். தமிழில் பாலச்சந்தரின் பொய் படத்தில் அறிமுகமானார். வம்புச் சண்டை, பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான பல படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனாலும் தமிழ், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வந்தார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா உதய் கிரண்?

இருபது நாட்களுக்கு முன்புதான் தன் 34 வது பிறந்த நாளை உற்சாகத்துடன் நண்பர்களுடன் கொண்டாடினார் உதய் கிரண்.

முன்னணி தெலுங்கு நடிகரும் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவியின் மகளுக்கும் உதய் கிரணுக்கும் 2003-ல் நிச்சயதார்த்தம் நடந்து, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் 2012-ல் அவர் தனது தோழி விஷிதாவை திருமணம் செய்து கொண்டார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா உதய் கிரண்?

நேற்று இரவு விஷிதா மணி கொண்டா என்ற இடத்துக்குச் சென்றிருந்தபோது, தனியாக இருந்த உதய்கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்ந்து தன் செல்போன் அழைப்புகளுக்கு உதய் கிரணிடமிருந்து பதில் இல்லாமல் போகவே, அவசரமாக வீட்டுக்கு வந்து பார்த்தார் விஷிதா. அப்போது உதய் கிரண் பிணமாகக் கிடந்தார்.

குடும்ப பிரச்சினைதான் அவர் தற்கொலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அனைத்து கோணங்களிலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக ஹைதராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அப்பல்லோவில் உதய்கிரண் உடல்

 

Post a Comment