ச்சீய்... பப்ளிசிட்டிக்காக 'உச்சா' போவதையெல்லாம் கூடவா ஷேர் பண்ணுவீங்க ஆமீர் கான்?

|

இந்தப் படத்தைப் பார்த்ததுமே... இது உண்மையா... போலியா என்ற கேள்வி உங்களுக்குள் எழக்கூடும்.

சந்தேகம் வேண்டாம். உண்மையான படம்தான். அதுவும் ஆமீர்கானே சந்தோஷமாக தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் படம் இது.

தானும் சல்மான்கானும் ஒரு ஓட்டலில் ஒன்றாக உச்சா போகும் 'அரிய' படத்தைத்தான் அவர் போட்டிருக்கிறார்.

சரி, எதற்காக இந்தப் படம் இப்போது என்கிறீர்களா?

ச்சீய்... பப்ளிசிட்டிக்காக 'உச்சா' போவதையெல்லாம் கூடவா ஷேர் பண்ணுவீங்க ஆமீர் கான்?

சல்மான்கான் நடிப்பில் ஜெய் ஹோ என்ற படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்துக்கு விளம்பரம் தேடும் வகையில்தான் இந்தப் உச்சா போட்டோவை வெளியிட்டுள்ளாராம் ஆமீர்கான். மேலும் இந்தப் புகைப் படத்தை தனது விருப்பப் படமாக வேறு குறிப்பிட்டுள்ளார் அதில்!

என்னதான் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்றாலும், பப்ளிசிட்டிக்காக இந்த மாதிரி படத்தையெல்லாமா வெளியிடுவார்கள் என கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஸ்டாலின் படம்தான் இந்த ஜெய் ஹோ என்பது குறிப்பிடத்தக்கது!

 

Post a Comment