சென்னை: ஜில்லா படத்தில் இருந்து நீக்கப்பட்ட எப்ப மாமா ட்ரீட்டு பாடல் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தின் நீளம் பெரும் குறையாக கருதப்பட்டது. படம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் என்று ஜவ்வாக இழுக்கிறது என்று விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து படத்தின் நீளம் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டது.
அப்படி நீளத்தை குறைக்கையில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் எப்ப மாமா ட்ரீட்டு பாடலுக்கும் கத்தரி போடப்பட்டது. ஆனால் இந்த பாடலை மீண்டும் படத்தில் சேர்க்குமாறு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று எப்ப மாமா ட்ரீட்டு பாடல் மீண்டும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தெரிவித்தார்.
சூப்பர் குட் பிலிம்ஸ், விஜய் கூட்டணி மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment