நஸ்ரியா.... அட்வான்ஸைத் திருப்பித் தருவாரா? கமிஷர் ஆபீஸைக் காட்டி பயமுறுத்துவாரா?

|

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் திடுமென்று திருமணத்தை அறிவித்திருக்கிறார் நஸ்ரியா.... அட்வான்ஸைத் திருப்பித் தருவாரா? கமிஷர் ஆபீஸைக் காட்டி பயமுறுத்துவாரா?  

இந்த திருமண செய்தியை முதலில் யாரும் நம்பவில்லை. இப்போது இயக்குநர் பாஸில் மற்றும் நஸ்ரியா இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜீவாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பெரிய தொகை அட்வான்ஸாக தரப்பட்டுள்ளது நஸ்ரியாவுக்கு. அடுத்து வேந்தர் மூவீஸ் படம் உள்பட மூன்று படங்களுக்கு அட்வான்ஸ் பெற்றுள்ளார் நஸ்ரியா.

இந்தப் படங்கள் சர்வநிச்சயமாக இந்த ஆண்டுக்குள் முடியப் போவதில்லை. ஆனால் நஸ்ரியாவின் திருமணமோ இந்த ஆண்டே நடக்கும் எனத் தெரிகிறது. நஸ்ரியா - பகத் பாசில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

அப்படியெனில் திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்ந்தால்தான் இந்த கமிட்மென்டுகளை நஸ்ரியாவால் முடிக்க முடியும்.

வாங்கிய அட்வான்ஸைத் திருப்பித் தருவாரா? அல்லது இதற்கும் கமிஷனர் ஆபீஸ் வாசலில் போய் நிற்பாரா என்ற குழப்பத்தில் தவிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

 

Post a Comment