சென்னை: மூத்த நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ் திரையுலகில் 1950 மற்றும் 60களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
எம்ஜிஆர் - சிவாஜியுடன்
பராசக்தி, மனோகரா, ரத்த கண்ணீர், சிவகங்கை சீமை, தெய்வபிறவி, குமுதம், ஆலயமணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் கதாநாயகனாக நடித்து வந்தார்.
உடல் நலக் கோளாறு
86 வயதான எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு சளி தொல்லை ஏற்பட்டது. வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரால் சாப்பிட முடியவில்லை. திரவ உணவு செலுத்தப்பட்டது.
திடீர் மயக்கம்
நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து டிரஸ்ட்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரத்குமார்
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகை ராதிகா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்த்தனர். டாக்டர்களிடம் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
Post a Comment