சென்னை: ட்விட்டரில் ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடியபோது நடிகர் விஜய்யை திட்டியவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் ட்விட்டர் இணையதளத்தில் தனது ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். ரசிகர்கள் தங்கள் தளபதியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவரும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இந்நிலையில் ஒருவர் விஜய்யை திட்டினார்.
இதனால் விஜய்யும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஜய் ரசிகர்கள் அந்த நபரை தேடிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து அறிந்த விஜய் தன்னை திட்டியவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறி அவரை காப்பாற்றினார்.
இதையடுத்து தனது தவறை உணர்ந்த அந்த நபர் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
+ comments + 1 comments
HA HA HA
Post a Comment