'பவர்' நடிகருக்கு இப்படி ஃபியூஸ் போயிடுச்சே!

|

சென்னை: பவர் நடிகர் சிறை சென்று திரும்பியதை அடுத்து பட வாய்ப்புகள் இன்றி தவிக்கிறாராம்.

பவர் நடிகர் சந்தன நடிகரின் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு முன்பு அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத திரையுலகம் அவரைத் தேடிச் சென்றது.

பவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் தான் அவர் பண மோசடி வழக்கில் கைதாகி டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் அவர் வெளியே வந்தபோதிலும் அவருக்கு வாய்ப்புகள் அளிக்க ஆள் இல்லையாம். இதனால் அவர் மீண்டும் சந்தன நடிகரிடம் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார்.

இந்த ஆளை நடிக்க வைத்தால் நம்ம மார்க்கெட்டை காலி பண்ணிடுவார் என்று நினைத்த சந்தன நடிகர் பவரை கை கழுவிவிட்டாராம். இதையடுத்து பவர் திரைப்பட கம்பெனிகளை நாடி வருகிறாராம். அவரை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு அவர் பாட்டுக்கு சிறைக்கு சென்றுவிட்டால் என்ன செய்வது என்று யாரும் வாய்ப்பளிக்க மாட்டேன் என்கிறார்களாம்.

ஒரே படத்தில் ஓஹோ என்று பேசப்பட்டு அந்த படத்தோடு மார்க்கெட் போன நடிகர் நானாகத் தான் இருப்பேன் என்று கூறி பவர் வருத்தப்படுகிறாராம்.

 

Post a Comment