எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டய கிளப்பணும் பாண்டியா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடந்தது.
பொன்மனம், அழகர்மலை, சுறா போன்ற படங்களை இயக்கியவர் எஸ் பி ராஜ்குமார். இவர் அடுத்து இயக்கும் படம் பட்டைய கிளப்பணும் பாண்டியா.
இதில் விதார்த் நாயகனாகவும், மனிஷா நாயகியாகவும் நடித்துள்ளார். ஹீரோவுக்கு இணையான வேடத்தில் சூரி நடித்துள்ளார்.
அருள்தேவ் இசையில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் இயக்குநர் எஸ்பி ராஜ்குமாரே எழுதியுள்ளார்.
இசை வெளியீட்டு விழா இன்று காலை கமலா திரையரங்கில் நடந்தது.
இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் முதல் குறுந்தகடை வெளியிட, அதை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பெற்றுக் கொண்டார்.
படத்தின் ட்ரைலரை இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் வெளியிட, நடிகர் ராதாரவி பெற்றுக் கொண்டார்.
மலேசியாவைச் சேர்ந்த ஆணிமுத்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
Post a Comment