நான் சிகப்பு மனிதனுக்குப் பிறகு ஹரி இயக்க, விஷால் நடித்து தயாரிக்கும் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது.
சமீபத்தில் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை விஷால் தொடங்கி, அவரே கதாநாயகனாக நடித்து, ‘பாண்டிய நாடு' படத்தை தயாரித்தார். சுசீந்திரன் டைரக்டு செய்த அந்த படம் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தனது அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறார்.
‘நான் சிகப்பு மனிதன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை திரு இயக்கி வருகிறார். இந்த படத்திலும் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர விஷால் திட்டமிட்டு இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து விஷால் தனது மூன்றாவது தயாரிப்பை கடந்த மாதமே அறிவித்தார் விஷால். இந்தப் படத்தை ஹரி இயக்குகிறார். ஏற்கனவே விஷாலை வைத்து, ‘தாமிரபரணி' என்ற படத்தை இயக்கி வெற்றி பெற வைத்தவர் ஹரி.
விஷால்-ஹரி இணையும் படத்தில், கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளனர்.
பாண்டிய நாடு படத்தை ஆரம்பித்த போதே, இது 2013 தீபாவளி ரிலீஸ் என உறுதியாக அறிவித்து, சொன்ன மாதிரியே ரிலீஸ் செய்து வெளியிட்டு வெற்றி பெற்றார் விஷால். இந்தப் படத்துக்கும் அதே போன்ற திட்டமிடலை செய்து வருகிறார்.
Post a Comment