ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார் நடிகை சமந்தா.
துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இந்தப் படம் வரும் பிப்ரவரியில் தொடங்குகிறது. பெரும் வெற்றி பெற்றுள்ள ஜில்லாவுக்கு அடுத்து வெளியாகும் படம் இது.
இந்தப் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பார் என்று செய்தி பரவியது. ஆனால் இப்போது ப்ரியங்கா சோப்ரா இல்லை.
அவருக்குப் பதில் சமந்தா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
விஜய்யுடன் ஏற்கெனவே ஜோடி சேரவிருந்தவர் சமந்தா. ஆனால் அப்போது அவருக்கு சரும நோய் பிரச்சினை இருந்ததால், அவருக்குப் பதில் அமலா பாலை தலைவாவில் ஜோடியாக்கிக் கொண்டார் விஜய்.
அப்போது தவற விட்ட வாய்ப்பை இப்போது மீண்டும் பெற்றுள்ளார் சமந்தா.
Post a Comment