தான் நிஜமாகவே ஒரு முழுமையான நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நடிகர் மோகன்லால்.
மலையாளத்தில் தான் நடித்து வெளியான கர்மயோதா படத்தை தமிழ் மொழியாக்கியபோது, தானே முன்வந்து தமிழில் டப்பிங் பேசி அசர வைத்துள்ளார் மனிதர்.
மேஜர் ரவி இயக்கியுள்ள படம் இது. தமிழில் வெற்றிமாறன் ஐபிஎஸ் என்று தலைப்பிட்டுள்ளனர்.
மலையாளத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தாலும், பாக்ஸல் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது.
இந்தப் படத்தை வெற்றி மாறன் ஐபிஎஸ் என்ற பெயரில் வி நாராயணன் டப் செய்துள்ளார்.
படத்தில் மோகன் லாலுக்கு முதலில் வேறு ஒருவரை டப் செய் வைக்கலாம் என்றுதான் யோசித்தார்களாம். எதற்கும் மோகன்லாலிடம் கேட்டு விடலாம் என்று கேட்டபோது உடனடியாக தானே பேசித் தருவதாகக் கூறினாராம்.
அதுமட்டுமல்ல, படத்தின் ட்ரைலரிலும், இந்தப் படம் குறித்து மோகன் லால் தன் சொந்தக் குரலில் தமிழில் அறிமுகம் செய்துள்ளார்.
ஒரு டப்பிங் படத்துக்கு மோகன் லால் இந்த அளவு மெனக்கெட்டதை, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் பாராட்டினார்கள், படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில்.
Post a Comment