சென்னை: பத்மபூஷண் விருதுக்கு தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கவிஞர் வைரமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்டுள்ளது.
கலை, இலக்கிய பணிகளுக்காக பத்மபூஷண் விருது எனக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தேசிய அளவில் ஆளுமைமிக்க ஓர் அங்கீகாரமாகும். இந்த விருது பெறுவதன் மூலம் அது தருகிற மகிழ்ச்சியை நான் மறைக்க விரும்பவில்லை. மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
நீண்ட பயணத்தில் நெல்லிச்சாறு போல இனி ஆற்றவிருக்கும் பணிகளுக்கு இது ஊட்டமும், உற்சாகமும் தரும் என்று நம்புகிறேன்.
இது இட்டுகொள்வதற்கான பட்டம் அல்ல, பெற்றுக்கொள்வதற்கான விருது என்று புரிந்து கொள்கிறேன். விருது என்பது பயணத்தின் முடிவல்ல, பயணப்பாதையில் இளைப்பாறி கொள்ளும் ஒரு பாலைவன சோலை, சற்றே இளைப்பாறிவிட்டு இன்னும் விரைந்து ஓடுவேன்.
கலை இலக்கியத்தின் வழியே மனிதகுல மேம்பாடு என்ற குறிக்கோளை தொடுவேன். இந்த ஆண்டு பத்ம விருது பெற்ற பெருமக்களை எல்லாம் வாழ்த்துகிறேன். என்னை இந்த விருதுக்கு முன்னெடுத்து சென்ற தமிழ் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் வைரமுத்து.
Post a Comment