எல்ரெட் குமார் தயாரிக்கும் 'யாமிருக்க பயமே'

|

விண்ணை தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களைத் தந்த ஆர்எஸ் இன்போடைன்மென்ட் அடுத்து தயாரிக்கும் புதிய படத்துக்கு யாமிருக்க பயமே, என தலைப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் 'யான்' படத்தை தயாரித்து வருகிறது இந்த நிறுவனம்.

அடுத்து 'பயம் ' என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாக கொண்டு இந்த 'யாமிருக்க பயமே' படத்தை எடுக்கிறது.

இயக்குனர் கே வி ஆனந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய டீ கே இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நைனிடாலில் நடந்துள்ளது.

"இந்த ஆண்டிவ் வெளியாகும் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக யாமிருக்க பயமே" என்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

 

Post a Comment