'அம்மா'விடம் அடைக்கலம் தேடும் காமெடி நடிகர்

|

சென்னை: தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியை ஆதரித்து கண்டமேனிக்கு பிரச்சாரம் செய்து தனது கெரியர் ஆட்டம் கண்ட நகைச்சுவை நடிகர் அம்மா கட்சி பக்கம் சாய விரும்புகிறாராம்.

காமெடியில் கலக்கி வந்த அவர் ஒரு முன்னணி கட்சிக்கு ஆதரவாக கடந்த தேர்தலில் தீயா பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது சக நடிகரும், அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான அந்த சிவப்பு கண் கொண்ட மனிதரை சகட்டு மேனிக்கு தாக்கிப் பேசினார்.

நடிகரின் கெட்ட நேரம் அவர் தாக்கிப் பேசியவர் எதிர்கட்சி தலைவர் ஆனார். நடிகரின் கெரியர் ஆட்டம் கண்டது. இதையடுத்து மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு சொந்த ஊருக்கு சென்றவர் சில ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அம்மா கட்சி பக்கம் சாய விரும்புகிறாராம். இதயைடுத்து அவர் உங்கள் கட்சியில் அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தோட்டத்திற்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.

தோட்டத்தில் இருந்து தனக்கு சாதகமாக ஒரு பதில் வராதா என்ற ஏக்கத்தில் அந்த திசையை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.

 

Post a Comment