மும்பை: பி வாசுவா.. யார் அவர்... அவர் படத்தில் நான் நடிப்பது எனக்கே தெரியாத செய்தி... என்று கூறி அதிர வைத்துள்ளார் நடிகை
இந்த செய்தியைப் படித்த ஐஸ்வர்யா ராய் டென்ஷனாகிவிட்டார்.
உடனடியாக மீடியாவிடம் மறுப்பும் தெரிவித்துவிட்டார். அதுவும் எப்படி... படு காட்டமாக!
"இந்த செய்தியை வெளியிட்டுள்ள இயக்குநர் யாரென்றே எனக்குத் தெரியாது. நானெப்படி இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும்? என்னிடம் 60க்கும் மேற்பட்டோர் கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரா என்று கூட நினைவில்லை. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. அந்த மாதிரி ஒரு படத்தில் நான் நடிக்கவே இல்லை," என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
அவரது பிஆர்ஓவும் பி வாசுவின் பிரஸ் ரிலீஸுக்கு மறுப்பு தெரிவித்து நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பி வாசுவிடம் இதுகுறித்துக் கேட்டால், 'ஐஸ்வர்யாவை அணுகியது உண்மை. கதை அவருக்குப் பிடித்திருந்தது," என பழைய பிளேட்டையே திருப்பிப் போட்டுக் காட்டுகிறார்.
ரஜினி போன்ற சிகரங்களுடன் பணியாற்றிய வாசுவுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள்!
+ comments + 3 comments
AISWARYA must be coreect
IDHELLAM FRAUD VELAI
IVSRUTHA appa evvalavu great
indha vudaals edhukku
averagea director
no one will give callsheet for this man
Post a Comment