அனாமிகா படத்தின் ஷூட்டிங்கின்போது தனக்கு கேரவன் தர மறுத்ததால் இயக்குநருடன் கடுமையாக சண்டை போட்டாராம் நடிகை நயன்தாரா.
இந்தியில் ஹிட்டான 'கஹானி' படத்தை தமிழ், தெலுங்கில் 'அனாமிகா' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர்.
கஹானியில் வித்யா பாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். சேகர் கம்முலா இயக்குகிறார்.
மும்பை, ஹைதராபாத் பகுதிகளில் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என்பதால் பொதுவாக அவருக்கு கேரவன் வசதி உண்டு. ஆனால் 'அனாமிகா' படப்பிடிப்பில் அவருக்கு கேரவன் கிடையாதாம்.
அதுமட்டுமல்ல, சேகர் கம்முலா தனது படங்களில் நடிகர், நடிகைகள் கேரவன்களை பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்.
ஆனால் இயக்குநரின் கொள்கையைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.. கட்டாயம் கேரவன் வேண்டும் என நயன்தாரா வற்புறுத்த, சண்டை மூண்டது.
கேரவன் இல்லாமல் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா தன் கடைசி அஸ்திரத்தை வீச, சேகர் கம்முலாவின் கொள்கை காணாமல் போனது. உடனடியாக நயனுக்கு சொகுசு கேரவன் வழங்கப்பட்டது.
Post a Comment