மும்பை: தனுஷ் அக்ஷரா ஹாஸன் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
தனுஷ் ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட் சென்றார். முதல் படமே சூப்பர் ஹிட், ரூ. 100 கோடி வசூல் என்று கலக்கினார். அவரது நடிப்புக்கு பிலிம்பேர் சிறந்த புதுமுக நடிகர் விருதை வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில் தனுஷ் ஆர். பால்கியின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸனுடன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பின் ஒவ்வொரு நொடியையும் ரசிப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் பால்கி மற்றும் பி.சி. ஸ்ரீராமுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக உள்ளதாக தனுஷ் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தின் மூலம் கமலின் இளைய மகள் நடிகையாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment