தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை அசிங்கமாகத் திட்டி மிரட்டல் கடிதம் எழுதுவோருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தைரியம் இருந்தா சொந்தப் பெயரைப் போட்டு திட்டி எழுத முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான சிவகுமார் மற்றும் நாசர், விஷால், சந்தானம் ஆகியோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாக பத்திரிகை செய்தி மூலம் அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றோம்.
கடந்த 31.1.2014 அன்று நடந்த சங்க செயற்குழுவில், சங்கத்திற்கு உறுப்பினர்களை தாக்கி வந்த மிரட்டல் கடிதங்கள் பற்றி விவாதித்து கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் சங்க உறுப்பினர்களின் நலனிலும் நல்வாழ்விலும் அக்கறை கொண்டுள்ள சங்க நிர்வாகம் இம்மாதிரி கோழைத்தனத்துடன் நம் சங்க உறுப்பினர்களுக்கு மிரட்டல் கடிதம் எழுதுபவர்களை கண்டிக்கிறோம். அந்த கடிதத்தை சங்க உறுப்பினர்கள் எழுதுவது போல் எழுதி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
எந்த உறுப்பினருக்கும் பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் செயல்களை சங்க நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது. கடிதம் எழுதியவர்கள் தைரியம் இருந்தால் தங்கள் பெயர்களை போட்டு கடிதம் எழுதி இருக்க வேண்டும். மிரட்டடல் கடிதம் எழுதியவர்கள் முகத்திரையை கிழிப்போம். அதற்காக காவல்துறை உதவியை நாட உள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
+ comments + 1 comments
i agree and this is condemnable and need to be ignored ans this is only mottaikaditham.You should not give more weightage.
எந்த உறுப்பினருக்கும் பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் செயல்களை சங்க நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது. - this is not correct
when some meber actor of your asson has suffered you have never come to help.
can u please tell what help you are rendering for leading actors except attacking them in all forums.
Post a Comment