இது கதிர்வேலன் காதலுக்கு வரிவிலக்கு கொடுங்க! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு

|

சென்னை: தான் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்துக்கு வரிவிலக்கு வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ரெட்ஜெய்ண்ட் மூவிஸ்' நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனு:

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்' படத்தை தயாரித்து உள்ளோம். இந்த படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்து விட்டது.

இது கதிர்வேலன் காதலுக்கு வரிவிலக்கு கொடுங்க! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு

எனவே உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து எங்களது திரைப்படத்தை பார்வையிட்டு இது வரிவிலக்கு பெற தகுதியானதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அறிக்கையின் அடிப்படையில் வரிவிலக்கு வழங்குவது குறித்து வணிக வரித்துறை கமிஷனர் தகுந்த முடிவு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுக்கு நோட்டீசு

இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வணிக வரித்துறை கமிஷனர் பதில் மனுதாக்கல் செய்ய நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்கும் வரிவிலக்கு அளிக்கவில்லை அரசு. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment