சென்னை: நிஜத்தில் நடக்காவிட்டாலும் படத்திலாவது திருமணம் நடக்கிறதே என்று நயன நடிகை கூறுகிறாராம்.
நயன நடிகை முதலில் விரல் வித்தை நடிகரை காதலித்தார். அவர்கள் காதல் இறுதியில் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நடிகை ரப்பர் பாடி வைத்திருக்கும் டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமாக உள்ளவரை காதலித்தார்.
அவர்கள் காதல் கல்யாணம் வரை செல்லவிருந்தது. இதற்காக நடிகை படங்களில் நடிப்பதை கூட நிறுத்திவிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் காதல் முறிந்து அவரவர் வழியை பார்த்து சென்றுவிட்டனர். ரப்பர் பாடி மும்பையில் செட்டிலாகி இந்தி படங்களை இயக்கி வருகிறார். நடிகை மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
நடிகைக்கு நிஜத்தில் திருமணமாகாவிட்டாலும் அவர் நடிப்பில் ரிலீஸான ராஜா ராணி, தற்போது நடித்து வரும் இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் அவருக்கு திருமணம் நடப்பது போன்று காட்சிகள் உள்ளன. இதை பார்த்த நடிகை நிஜத்தில் நடக்காதது படங்களிலாவது நடக்கிறதே என்று மனதில் உள்ள ஏக்கத்தை வெளிப்படுத்துகிறாராம்.
Post a Comment