சென்னை: மகள்களுக்கு திருமணமாகி அவர்களின் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ ஆசையாக உள்ளது என நடிகை ஸ்ரீதேவி கூறினார்.
சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக் கழக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ஸ்ரீதேவி.
சென்னையை மறக்கமுடியாது
அப்போது அவர் பேசுகையில், " மும்பையில் இருந்தாலும் சென்னையை என்னால் மறக்க முடியாது. இங்குள்ள இடங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. தமிழ் டி.வி. சேனல்களை தொடர்ந்து பார்க்கிறேன். சில டி.வி. தொடர்களையும் பார்க்கிறேன்.
காமெடி பிடிக்கும்
தமிழ் காமெடி சீன்கள் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். டி.வியில் காமெடி சீன்கள் வரும்போத தவறாமல் பார்த்து விடுவேன். எனக்கும் காமெடி படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது.
பாராட்டு
தமிழ் நடிகர், நடிகைகள் சிறப்பாக நடிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உள்ளது. அவற்றை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த மாதிரி இயக்குநர்களும் அமைந்துள்ளனர்.
குடும்பத் தலைவி
நான் நல்ல குடும்பத் தலைவியாக இருக்கிறேன். வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நானே மார்க்கெட்டுக்கு போய் வாங்கி வருகிறேன். ஓய்வு நேரத்தில்தான் நடிக்கிறேன்.
பேரக்கு ழந்தைகள்
எனது மகள்களுக்கு திருமணம் நடந்து, பேரக் குழந்தைகளை கொஞ்சி விளையாட வேண்டும் என இப்போதே எனக்கு ஆர்வமாக உள்ளது," என்றார்.
Post a Comment