சென்னை: இஸ்லாத்தை பின்பற்றுவதாக அறிவித்துள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 5 வேளை தொழுகை நடத்துவதாகவும், குர் ஆன் ஓதுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை பின்பற்றுகிறாராமே என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் யுவன் ட்விட்டரில் பகிரங்கமாக தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் இஸ்லாத்தை பின்பற்றும் அவர் தாடி வளர்க்கிறாராம். தினமும் 5 வேளை தொழுகிறாராம். மேலும் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை ஓதுகிறாராம்.
இஸ்லாத்தைப் பின்பற்றுவதாக அறிவித்துள்ள யுவனை வரவேற்று முஸ்லிம் சமுதாயத்தினர் ட்வீட் செய்து வருகின்றனர். அவர்களின் ட்வீட்டுக்கு யுவனும் நன்றி தெரிவித்து வருகிறார்.
Post a Comment