மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்! - புது இயக்குநர் குமுறல்

|

'மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்' என்று படவிழாவில் புலம்பினார் புதிய இயக்குநர் மனுக் கண்ணன்.

மனுஸ்ரீபிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் 'அங்குசம்'.

தகவல் உரிமைச் சட்டம் பற்றிய பின்னணியில் உருவாகியுள்ள கதை இது.

மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்!  - புது இயக்குநர் குமுறல்

இப்படத்தின் பத்திரிகை, ஊடகங்களின் சந்திப்பு ஆர்கேவி ஸ்டுடியோவில் பேசிய மனுக்கண்ணன் கூறுகையில், "இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் தாமதமாக வந்ததற்குக் காரணம் இந்தப்படம் தொடர்பான வழக்கிற்காக நீதிமன்றம் சென்று வந்ததே.

இந்தப்படம் RTI எனப்படும் தகவல் உரிமைச்சட்டம்( RIGHT TO INFORMATION ) பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சரியான படம். இதற்காக பல தடைகளை எதிர் கொண்டு வருகிறேன்.

இது ஒரு நியாயமானபடம். இந்த தகவல் உரிமைச்சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தேவையான சட்டம். ஆனால் மக்கள் அதுபற்றிய விழிப்பில்லாமல் இருக்கின்றனர்.

மக்களுக்காகப் படமெடுத்தால் மான நஷ்ட வழக்கு போடுகிறார்கள். முதல்வர் பெயருக்கு களங்கம் செய்ததாகஎன் மீது போடப்பட்டுள்ள வழக்கு போலியானது. அது தவறான வழக்குப் பதிவாகும்.. ஒன்று மட்டும் புரிகிறது அரசு வழக்கறிஞருக்குத் தமிழ் தெரியவில்லை.

நான் முதல்வர் பற்றி படத்தில் உயர்வாகத்தான் காட்டியுள்ளேன். தவறாக எதையும் சொல்ல வில்லை. இதை 20 முறை படம் பார்த்த பலரும் தமிழக அரசின் படங்களுக்கான தேர்வுக்குழுவிலுள்ள சங்கர் கணேஷ் உள்பட அனைவரும் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.

என் மனைவி நான் சினிமா டைரக்டர் ஆனதற்குத் திட்டுகிறார். 'இன்ஜினியராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. மேனேஜராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. டைரக்டர் என்பது கேவலமாக இருக்கிறது.'என்று திட்டுகிறார்.
.
இந்தப் படம் வெற்றியோ தோல்வியோ, நான் கவலைப்பட மாட்டேன். மீண்டும் வெளிநாடு செல்வேன். சம்பாதித்து மறுபடியும் வந்து மக்கள் படம் எடுப்பேன்," என்றார்.

 

+ comments + 1 comments

Anonymous
3 February 2014 at 22:34

What producr council is doing
they can help you
but kr is govt nominee
try ur luck boss

Post a Comment