மும்பை: இந்தி நடிகை வித்யா பாலன் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை வித்யா பாலன் யுடிவி தலைவர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வித்யா கடந்த சில வாரங்களாக மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி செல்கிறாராம். அவருடன் சில சமயம் அவரது குடும்பத்தார் செல்கிறார்களாம்.
வித்யா எதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு வருகிறார் என்பதை மருத்துவமனை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது. வித்யாவும் இது குறித்து வாய் திறக்கவில்லை. மேலும் அவர் தன்னுடைய ஷாதி கி சைட் எபெக்ட்ஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் டிமிக்கி கொடுக்கிறார்.
இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில் வித்யா கர்ப்பமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை அவரே வாய் திறந்து கூறினால் தான் உறுதிப்படுத்த முடியும்.
Post a Comment