பரபரப்பு பப்ளிசிட்டிக்காக எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் பெயர்களைத் தலைப்பாக்கிய வனிதா விஜயகுமார்!

|

பப்ளிசிட்டிக்காக சாதனை நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் பெயர்களையே ஒரு சினிமா தலைப்பாக்கி, அதன் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் பரபரப்புத் திலகம் வனிதா விஜயகுமார்.

விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா ஏற்கெனவே இருமுறை திருமணம் செய்து, அவற்றை முறித்துக் கொண்டவர்.

இப்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாயின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வனிதா இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஒருமனு கொடுத்தார்.

பரபரப்பு பப்ளிசிட்டிக்காக எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் பெயர்களைத் தலைப்பாக்கிய வனிதா விஜயகுமார்!

பின்னர் வனிதா நிருபர்களிடம் பேசுகையில், "நான் 'வனிதா பிலிம் புரோடக்ஷன்' சார்பில் புதுப்படம் தயாரிக்கிறேன். இந்த படத்துக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நால்வரும் சினிமாவுக்கு கடவுள் போன்றவர்கள். எனவேதான் இவர்கள் பெயரில் படம் எடுக்கிறேன்.

இதில் நான்கு பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். பிரபலமானவர்கள் மற்றும் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். டான்ஸ்மாஸ்டர் ராபர்ட் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நடக்க உள்ளது. படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன்," என்றார்.

 

Post a Comment